உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மிலேனியம் செலேஞ் கோப்பரேசனின் 480 மில்லியன் டொலர்களை இலங்கை இழக்கிறது.

மிலேனியம் செலேஞ் கோப்பரேசனின் 480 மில்லியன் டொலர்களை இலங்கை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் முதல் இந்த நிதியை இலங்கைக்கு வழங்கும் வகையில் உடன்படிக்கையை செய்துக்கொள்ள அமரிக்கா வலியுறுத்தி வந்தது.

எனினும் அரசியல் காரணங்களுக்காகவும் இலங்கையின் இறைமையை காரணம் காட்டியும் இலங்கை இதற்கு பின்னடித்து வந்தது.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்த உடன்படிக்கையை செய்துக்கொள்ள உடன்பட்டபோதும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த உடன்படிக்கைக்கு இன்று வரை இணக்கம் வெளியிடவில்லை.

இந்தநிலையில் இது தொடர்பில் எம்சிசியின் நிறைவேற்று சபை கடந்த வாரம் கூடி ஆராய்ந்தது.

இதன்போது இலங்கை இந்த உடன்படிக்கையை செய்துக்கொள்வதில் தாமதம் காட்டிவருவது தொடர்பாக ஆராயப்பட்டது.

அத்துடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் பேசப்பட்டது.

இந்தநிலையில் எதிர்வரும் டிசம்பரில் எம்சிசியின் வருடாந்தக் கூட்டம் நடைபெறும்போது இந்த நிதியை வழங்கக்கூடிய மற்றும் ஒரு நாட்டை தெரிவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை 2020ஆம் ஆண்டில் இருந்து இந்தநிதியை இலங்கையால் பெற்றுக்கொள்ளமுடியாது என்று எம்சிசியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜென்னர் எடெல்மன் தெரிவித்துள்ளார்.

நிதிக்கான கோரிக்கையை முன்வைத்த அரசாங்கமே அந்த நிதியை பெற்றுக்கொள்ள உடன்படிக்கை செய்துக்கொள்ளாமல் இருக்கும் செயலை தாம் இதுவரை கண்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கையில் புதிய அரசாங்கத்தின் கீழ் டிசம்பருக்குள் இந்த நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்;பார்ப்பதாக ஜென்னர் எடெல்மன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க