உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜப்பான் இலங்கைக்கு 1.6 பில்லியன் ரூபா நிதி உதவி

மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்குமான பணிகளுக்காக ஜப்பான அரசாங்கம் இலங்கைக்கு நிதி உதவியினை வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலினால் நாட்டுக்குள் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த சுற்றுலாத் தொழிற்துறைக்கு பாரிய அளவில் எதிர் மறையான தாக்கம் பொருளாதாரத்துக்க ஏற்பட்டது.

இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இதற்கு உடனடி பெறுபேறாக ஜப்பான் அரசாங்கத்தினால் 1 பில்லியன் ஜப்பான் யென்களை அதாவது 1.6 பில்லியன் ரூபாவை திட்டமில்லாத நன்கொடையாக இலங்கை பொலிஸ் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கு பயங்கரவாதத்தை தடுப்பதற்கான ஆற்றலை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான உபகரணங்களை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது.

இதற்கமைவாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் விமான பயணிகளின் பாதுகாப்புக்கான கண்காணிப்பு உள்ளிட்டவற்றிற்கு உபகரணங்களை ஜப்பான் அரசாங்கம் இலங்கை பொலிஸ் மற்றும் விமான சேவை நிறுவனம், இராஜாங்க பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு ஊடாக வழங்கவுள்ளது.

இதற்கான மானிய உதவிக்கான பரிமாறல் ஆவணப்பத்திரம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நிதி அமைச்சில் இன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர் எச் எஸ் சமரதுங்க மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா ஆகியோர் பரிமாறல் ஆவணப்பத்திரத்தில் கைச்சாத்திட்டனர்.

கருத்து தெரிவிக்க