உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கள்ளுத்தவறனையை அகற்றக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

வவுனியா கந்தன்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் நீண்ட நாட்களாக இயங்கிவந்த களுத்தவறனையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா பூவரசங்குளம் கிராமர் சேவகர் பிரிவுக்குற்பட்ட கந்தன்குளம் சந்தியில் இயங்கி வரும் கள்ளுத்தவறனையினால் புலவர்நகர், குருக்கள்ஊர், கந்தங்குளம், பூவரசங்குளம்  ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் குறித்த கள்ளுத் தவறனையை உடனடியாக அகற்றக்கோரி  இன்று காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை கந்தன்குளம் சந்தியில் பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும்  பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது கந்தன்குள சந்தியை கள்ளுக்கடையாக்காதே..!, பேரூந்து தரிப்பிடத்துக்கு முன்பாக கள்ளுக்கடை அமைப்பது முறையானதா?, பாடசாலை போகும் வழியில் கள்ளுக்கடைவேண்டாம்?, போன்ற வாசகங்கள்  எழுதப்பட்ட பதாதைகளுடன் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து குறித்த ஆர்பாட்டம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந் நிலையில் தொலைபேசியில் உரையாடிய பிரதேச செயலாளர் குறித்த கள்ளுத் தவறனையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து சென்றனர்.

கருத்து தெரிவிக்க