தாமரை கோபுரம் எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
தெற்காசியாவின் பாரிய கோபுரமான குறித்த கோபுரம் 350 மீற்றர் உயரம் மற்றும் 17 அடுக்குகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்கென 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதில் 80 சதவீதமான நிதியை சீனா முதலீடு செய்துள்ளது. நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க