உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அநீதி

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளளதுடன் தமக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் பல்கலைக் கழக உதைபந்தாட்ட தலைவர் உள்ளிட்ட வீரர்களும் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர்

இணைந்து ஊடக சந்திப்பொன்றை இன்று மதியம் நடாத்தியிருந்தனர் இதன் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக உதைபந்தாட்ட தலைவர் உள்ளிட்ட வீரர்கள்…

பல்கலைக் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி கொத்தலாவ்வில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் போட்டியில் மொரட்டுவ பல்கலைக்கழகமும் யாழ் பல்கலைக் கழகமும் மோதியது.

இதன் போது எமது அணியின் உப தலைவர் காயமடைந்ததுடன் மழையும் குறிக்கிட்டதால் போட்டியில் தாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து பின்னர் போட்டி வைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் போட்டி நடாத்த முடியாது எனக் கூறி எமது பல்கலைக்கழகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வீர்ர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந் நிலையில் தற்போது இரண்டு பல்கலைக் கழகங்களும் இணை சம்பியன் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு எமக்கு தாக்கத்தை ஏறபடுத்தியிருக்கிறது.

இது எமக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே நாம் பார்க்கிறோம். ஆகவே எங்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் தெரிவித்ததாவது..

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் எமது பல்கலைக் கழக அணியே பல வெற்றிகளைப் பெற்று வந்தது.

அதேபோன்று இத் முறையும் எமது அணி வெற்றி பெ்றதாகறிவுக்கப்பட்டு இப்போது இணை சம்பியின் என்று கூறுவதை ஏற்க முடியாது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

தோல்வியை கூட ஏற்று கொள்ளலாம் ஆனால் அநீதியை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இந்த விடயத்தில் உரிய தரப்பினர்கள் கரிசனை கொண்டு சரியான நீதியை பெற்று தர வேண்டும் இணை சம்பியன் ஏற்க முடியாது.

முடிந்தால் போராடி பார்ப்போம். நாம் தோற்றாலும் பரவாயில்லை மீள போட்டியை நடாத்த வேண்டும் இது எமது அணி வீரர்களின் ஆதங்கமான இருக்கிறது.

ஆகவே எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சரியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க