உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சுகாதார தொண்டர் விடயத்தில் அரசியல் தலையீடு!!

சுகாதார தொண்டர்கள் விடயத்தில் அரசியல் தலையீடு இருக்கின்றமையே அவர்கள் இன்று வீதியில் நிற்பதற்கு காராணம் என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப,சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து  தெரிவித்த அவர்….

நான் சுகாதார அமைச்சராகவிருந்து போது மாவட்ட ரீதியாக சுகாதார திணைக்களத்தால் சேகரிக்கபட்ட உண்மையான சுகாதார தொண்டர்களின் பட்டியல்கள் தயார்செய்யபட்டு அமைச்சர்வாரியத்தின் அங்கீகாரம் பெறப்பட்டு  மத்தியஅரசிற்கும்,

அப்போது கடைமையாற்றிய ஆளுனருக்கும் அனுப்பட்டதுடன் இப்போதும் அந்த பட்டியல் இருக்கிறது.

வடக்குமாகாண சபையின் இறுதி காலப்பகுதியிலேதான் மத்திய அரசினுடைய ஆளணி அனுமதி எமக்கு கிடைக்கபெற்றது.

எனவே அதனை நிரப்புவதற்கான அவகாசம் எமக்கு இருக்கவில்லை.எனினும் அப்போது மாகாண சுகாதார அமைச்சராகவிருந்த குணசீலனால் அந்தபட்டியல் மாகாணசபையில் முன்வைக்கபட்டு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கபெற்றது.

இனிமேல் ஆட்சேர்பினை மேற்கொள்ளும் போது அந்த பட்டியலில்  உள்ளவர்களிற்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கபடவேண்டும் என்று வடக்குமாகாணசபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளபட்டது.

ஆனால் அந்த விடயம் நடைமுறைப்படுத்தபடாமையே இன்று சுகாதார தொண்டர்கள் வீதியில் இறங்கிபோராடுவதற்கு காரணமாகியுள்ளது.

அவர்களின் கோரிக்கை நியாயமானது போர்காலத்தில் சேவையாற்றிய பலர் இன்று தெருவிலே வெளிவிடப்பட்டிருக்கின்றார்கள்.

ஏற்கனவே அமைக்கபட்ட பட்டியலுக்கு அப்பால் பலர் இந்த நியமனங்களிற்கு உள்வாங்கபட்டிருக்கின்றார்கள்.

குறித்த பட்டியலில் 900 பேர் இருக்கும் போது ஏன் 2500 ற்கும் மேற்பட்டோர் குறித்த நேர்முகதேர்விற்கு அழைக்கபட்டனர்.

பல அரசியல் பிரமுகர்களின் பட்டியல்கள் ஆளுனரின் காரியாலத்திலே இருந்து அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்களிற்கும் நேர்முக தேர்விற்கு அனுமதிக்கும் படி அனுப்பபட்டுள்ளது.

இதனால் முன்னர் சேகரிக்கப்பட்ட தொண்டர்கள் பட்டியலில் இல்லாத பலர் அரசியல் செல்வாக்கினால் உட்புகுத்தபட்டிருக்கின்றார்கள்.

ஒருநாள் கூட வைத்தியசாலைக்கு வராதவர்களும் நேர்முகதேர்விற்கு உள்வாங்கபட்டிருப்பதாக பாதிக்கபட்ட தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வடமாகாண ஆளுனர் ஆராயவேண்டிய கடப்பாடு இருக்கிறது.

அத்துடன் நியமனத்திற்கான கல்விதகமை 8 ஆம் ஆண்டு என நிர்ணயிக்கபட்டிருந்த நிலையில் அதற்கு மேலதிகமாக கற்றவர்களிற்கு நேர்முகதேர்வில் அதிக புள்ளிகள் வழங்கபட்டுள்ளது.

இதனால் சேவைக்காலம் அதிகமாக இருந்தும் கல்விதகமை குறைவாக இருந்தவர்கள் இதன்போது தட்டிக்கழிக்கபட்டிருக்கின்றார்கள். இதுவே அவர்கள் மண் எண்ணை ஊற்றும் அழவிற்கு பூதாகரமாக்கியுள்ளது.

நான் 2010 இல் வைத்திய அதிகாரியாக கடமையாற்றும்போது  ஜி,எப்.ஏ,ரி.எம், என்ற  திட்டம்  நாட்டில் உருவாக்கபட்டிருந்தது.

அந்த திட்டத்தின் மூலம்  சுகாதார தொண்டர்களை உள்வாங்கி அவர்களை  கிராமங்களிற்கு அனுப்பி  களஆராய்வுகளை மேற்கோள்வதுடன், அவர்களுக்கு  மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் ஊக்குவிப்பு தொகையினை வழங்குவதாக அந்த திட்டம் இருந்தது.

அவர்களை தெரிவுசெய்வதற்காக நாம் நேர்முகபரீட்சையினையும் வைத்திருந்தோம்.

இதன்போது அப்போது இருந்த ஆளுனரின் செல்வாக்கினை பயன்படுத்தி வடக்கை சேர்ந்த அமைச்சர்கள் எம்மால்  தெரிவுசெய்யபட்ட பட்டியலை நிராகரித்துவிட்டு தங்களுடைய பட்டியலை கொடுத்திருந்தனர்.

அப்போது நிராகரிக்கபட்ட தொண்டர்களே தற்போது வீதியில் நிற்கின்றார்கள். 2010 ஆம் ஆண்டிலேயே அரசியல் தலையீடு சுகாதார தொண்டர்கள் விடயத்தில் வந்துவிட்டது.

அரசியல் தலையீடு காரணமாக போர்காலத்தில் சேவையாற்றிய பல தொண்டர்கள் பாதிக்கபட்டுள்ளமை அவர்களிற்கு செய்யும்  துரோகமாகவே அமையும்.

யாழ்மாவட்டத்திலே அந்த தலையீடு குறைவாக இருந்தநிலையில் வன்னிமாவட்டத்தில் அதிகாரிகளால் தெரிவுசெய்யபட்ட பட்டியல் முழுமையாக புறக்கணிக்கபட்டு அரசியல் வாதிகளால் அல்லது அமைச்சரால் புதிய பட்டியல் கொடுக்கபட்டது.

சில வேளை அந்த விடயம்  அமைச்சருக்கு தெரியாமல் அவரது ஆளணியால் கூட கொடுக்கபட்டிருக்கலாம்.

எனவே ஆளுனர் இந்தவிடயங்கள் தொடர்பாக கரிசனை கொள்ளவேண்டும் நாம் முன்னர் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக அவருடன் தகவல்களை பரிமாறிகொள்வதற்கு எந்நேரமும் தயாராகவிருக்கிறோம் என்றார்.

கருத்து தெரிவிக்க