மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மூர்வீதி கிராமத்தில் 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள் இன்று வியாழக்கிழமை (5) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுத்தீனின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மூர்வீதி கிராமத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மன்னார் நகர சபை உறுப்பினர் உவைசூல் ஹர்னி தலைமையில் இன்று வியாழக்கிழமை(5) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலைக் கட்டடம் , மையவாடிக்கான உள்ளக பாதை மற்றும் மின் விளக்கு பொறுத்தல் , கிறவல் பாதை அமைத்தல் போன்ற திட்டங்கள் ஆரம்பிக்கும் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுத்தீன் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் என்.முஜாஹிர் , தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்வர் , அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் எம்.முஜிபுர் ரகுமான் , மன்னார் நகரசபை உறுப்பினர்களான என். நகுசீன் , திருமதி டிலானி குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க