உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்தாரிகளின் தொலைபேசி பதிவுகள் தொடர்பான ஆய்வு அறிக்கை தம்மிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையில் விசாரணைகள் தொடரும் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
(எஃப்.பி.ஐ) கூட்டு விசாரணை பணியகம் குறித்த தொலைபேசி ஆய்வறிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைந்துள்ள நிலையில் அப்பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன முன் விசாரணை இடம்பெற்ற பொழுதே குற்றப்புலனாய்வு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்தாரிகள் பயன்படுத்திய தொலைபேசிகளிலிருந்து முக்கிய தரவுகளை மீட்டெடுப்பதில் கூட்டு விசாரணை பணியகம் (எஃப்.பி.ஐ) ஆதரவளித்ததாகவும், அத்தகைய தரவுகளை மீட்க இலங்கையில் தொழில்நுட்பம் இல்லை என்றும் குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
‘குறித்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு விசாரணைக் குழுக்கள் (எஃப்.பி.ஐ) ஒத்துழைப்பு வழங்குவதோடு இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகின்றன.
இதேவேளை தாக்குதல் இடம்பெற்ற இடங்களில் கிடைத்த உடல் எச்சங்களின் மாதிரிகள் மற்றும் தற்கொலை குண்டுதாரிகளின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட மயிர் மற்றும் குருதி மாதிரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளிநாட்டு விசாரணைக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
இந்த மாதிரிகள் கொழும்பு நீதித்துறை வைத்திய அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளதாக’ குற்றப்புலனாய்வு பிரிவு இதன் போது மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க