உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சிறுவர் நூல்களின் வெளியீட்டு விழா

உளவளத்துறை எழுத்தாளர் நப்லா சலாஹுதீன் எழுதிய சிறுவர் நூல்களின்  வெளியீட்டு விழா (31.8.2019)  கண்டி ரோயல் கெண்டியன் ஹோட்டலில் இடம்பெறது.

பிரதம அதிதிளாக உளவியலாளர் மெளலவி அப்துல் ஹமீத்ஊக்குவிப்பு பேச்சாளர் பாசிர் மொகிடீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூலாசிரியர் நப்லா சலாஹுதீன்பேராதனை சிரிமாவோ பண்டாரநாயக்கா விசேட சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் எம்.எப்.எம்.பஸ்லி ஆகியோர் நூல்களின் முதற் பிரதிகளை அதிதிகளுக்கு  வழங்கி வைத்தனர்

The Crown and The Robe” (கிரீடமும் அங்கியும்) என்ற நூலூம் (Hajara Counts Her Blessings) ஹஜாரா தனது ஆசீர்வாதங்களை எண்ணுகிறார் என்ற நூலும் வெளியிடப்பட்டன.

வெளியிடப்பட்ட கிரீடமும் அங்கியும் என்ற நூல் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கதைகளை படிக்க. மதிப்பிட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 4 முதல் 9 வயதுடைய சிறுவர்களை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது

ஹஜாரா தனது ஆசீர்வாதங்களை எண்ணுகிறார் எனும் நூலானது 5 முதல் 12 வயது வரையான பிள்ளைகளை இலக்காக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

இது வறுமையை மற்றும் மற்றையவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்தும்போன்ற வற்றை எடுத்துக் காட்டுவதாகவும் எழுதப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க