உள்நாட்டு செய்திகள்புதியவை

‘ஜனாதிபதிக்கான பதவி தொடர்பில் கோத்தாவுடன் பேச்சுவார்த்தை’

கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற இருக்கின்றது.இதன்போது ஜனாதிபதிக்கு எதிர்காலத்தில் எவ்வாறான பதவிகள் வழங்குவது தொடர்பில் அவர்கள் மத்தியில் கலந்துரையாடப்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை என்பது வெறும் பேச்சளவிலே இருக்கும் எனவும் செயற்பாட்டில் அவை இடம்பெறபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் திலான் பெரேரா ஆகியோர் பொதுஜன பெரமுன அமைப்பின் உறுப்புரிமையை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க