சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று நாடெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் நினைவுகூரப்படுகின்றது.
இதனை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் இரு பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய வடக்கு – கிழக்கில் உள்ள 5 மாவட்ட மக்கள் ஓமந்தையிலும் 3 மாவட்ட மக்கள் கல்முனையிலும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
ஓமந்தையிலேயே அதிகளவான பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததன் அடிப்படையில் அங்கு போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்ததாக காணமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு போராட்டங்களுக்கும் ஆதரவு வழங்குமாறு அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகத்தினால் காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு பிற்பகல் 1.30 மணி தொடக்கம் 4 இடம்பெறவுள்ளது.
இறுதி யுத்தத்திற்கு முன்பும் யுத்தத்தின்போதும் யுத்தத்திற்கு பின்னரும் பலர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கருத்து தெரிவிக்க