காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களில் பலருக்கு உரிய பதில் கிடைக்காமல் போகலாம் என காணாமல் போனவர்கள் அமைப்பின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
, “இலங்கையில் பலர் காணாமலாக்கப்பட்டனர் என்பதை ஏ ஏற்றுக்கொள்ளாதுள்ளனர் . சிங்கள ஊடகங்கள்கூட அதனை ஏற்க மறுக்கின்றன. காணாமலாக்கப்பட்டதை நியாயப்படுத்துகின்றனர்.
அவை காணாமலாக்கப்படுதலை ஊக்குவிக்கும் வகையில் காணப்படுகின்றன.
காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகள் குறித்து பதிலை எதிர்பார்த்திருக்கும் பலரிற்கு அவர்களது வாழ்நாளில் அவர்கள் எதிர்பார்த்திருக்கின்ற பதில் கிடைக்காமல் போகலாம். உலக நாடுகள் பலவற்றின் அனுபவம் அவ்வாறானதாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க