உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – கோத்தாபய

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதாக, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை என அதிருப்தி வெளியிட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இதுகுறித்து விசாரிக்க சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்தநிலையில், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவினால் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “கர்தினால் கத்தோலிக்கர்கள் சார்பாக மட்டுமல்லாமல் அனைத்து இலங்கையர்களின் சார்பிலேயே அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால், இருந்தவர்களையும், தாக்குதல்களுக்கு சதி செய்த மற்றும் நிதியுதவி செய்தவர்களையும், தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியவர்கள், பரிந்துரைகளைச் செய்தவர்களையும் அடையாளம் காண விசாரணைக் குழுவை அமைக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

ஜனாதிபாதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகள் குறித்து விசாரிக்கவும், அனைத்து இலங்கையர்களும் அச்சமின்றி வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கும் ஒரு சுயாதீன விசாரணைக்குழு நியமிக்கப்படுவதை உறுதி செய்வேன்” என்று கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க