வளைகுடா கடற்கரை மாநிலமான வெராக்ரூஸின் நெடுஞ்சாலைகளின் நடமாடிய பங்களாதேஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் கடுமையான நீரிழப்பு மற்றும் பசியுடன் இருப்பதைக் கண்டறிந்ததாக மெக்சிக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க எல்லையை அடைவதற்காக குடியேற்றவாசிகள் நீண்ட, சிக்கலான பயணத்தை மேற்கொள்வதாக மத்திய பொது பாதுகாப்பு துறை கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
குடியேற்றவாசிகள் ஏப்ரல் 24 ஆம் திகதி கட்டார் விமான நிலையத்திலிருந்து துருக்கி மற்றும் கொலம்பியா நோக்கி புறப்பட்டதாகவும் அவர்கள் ஈக்குவடோ பனாமா மற்றும் குவாத்தமாலா வழியாக மெக்ஸிக்கோவை அடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை மெக்ஸிக்கோவில் குடியேறியவர்கள் படகுகள் மூலம் கோட்ஸாகோல்கோஸ் நதியில் பயணம் செய்தனர் எனினும் அவர்கள் அவ்வாறு பயணம் செய்ததற்கான காரணம் தெரியவில்லை. அந்த நதி எவ்விடத்திலும் அமெரிக்க எல்லையை தொடுவதில்லை.
இப்புலம்பெயர்ந்தோர் அகாயுகன் நகராட்சியில் காணப்படும் ஒரு புலம்பெயர்ந்தோர் மையத்திற்கு மாற்றப்படுவர். அங்கு அவர்களின் சட்ட கட்டுப்பாடுகள் வரையறுக்கப்படும். அவர்களின் தேசியங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான வசதிகள் வழங்கப்படும்.
கடந்த புதன்கிழமை மெக்சிக்கோ அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவுடனான ஜுன் 7 குடிவரவு ஒப்பந்தத்தின் படி ஆபத்தான முறையில் புலம்பெயர்ந்த 19005 குடியேற்றவாசிகளை தமது நாடு தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்களின் பலர் நெரிசலான பேருந்துகள் மற்றும் சரக்கு லொறிகளில் எல்லையை கடக்க முற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க