ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு அடுத்தவாரம் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குதல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகிய இருவரையும் இந்த சந்திப்பில் பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.
இச்சந்திப்பின்போது எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே சுதந்திரக்கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை, கூட்டணி அமைக்கும் முயற்சி கைகூடாத பட்சத்தில் சுதந்திரக்கட்சி மாற்று வழியை தேடலாம் என்றும், சஜித் பிரேமதாச போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு ஆதரவு வழங்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகின்றது.
இவ்வாறானதொரு நிலைஏற்பட்டால் சுதந்திரக்கட்சி மேலும் உடையுமெனவும் கூறப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க