உள்நாட்டு செய்திகள்

‘மைத்திரிக்கு பிரதி பிரதமர் பதவி’ – யோசனை முன்வைப்பு!

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் மலரவுள்ள புதிய ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவியை வழங்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்ச பிரதமராகவும் செயற்படுவார்கள். எனவே, பிரதி பிரதமர் பதவியை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குமாறு நான் யோசனை முன்வைத்துள்ளேன்.

இதற்கு கூட்டு எதிரணி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிடவில்லை. சட்டபூர்வமாக இப்படியொரு பதவி இல்லாதபோதிலும் எதிர்காலத்தில் அரசியலமைப்பில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தலாம்.” என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

 

கருத்து தெரிவிக்க