ரஜரட்ட மற்றும் வன்னி பகுதிக்கு நன்மை பயக்கும் மல்வத்துஓயா நீர்த்தேக்க நிர்மாண பணிகள் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் அதிகளவு நிதியை ஒதுக்கியதாகவும அவர் இங்கு தெரிவித்துள்ளார்.
வவுனியா மற்றும் வன்னி பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலை அவசர விபத்து பிரிவு திறந்து வைத்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க