இன்று திருகோணமலை மனித உரிமைகள் அலுவலகத்திற்கு முன்பாக 10 மணியளவில் கவண ஈர்ப்பு போராட்டம் ஒன்று வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிளால் முன்னெடுக்கப்பட்டது.
இக்கணவண ஈர்ப்பு போராட்டத்தில் வடகிழக்கில் எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சமார்40 மேற்பட்டோர் கணப்பட்டனர்.
10 வருடங்களைக்கடந்து தமது தேடல் தொடர்வதாகவும் சர்வதேசமும் அரசாங்கங்களும் தம்மை கைவிட்டதை தாம் உணர்வதாகவும் தமது வலிகளுக்கு அரசாங்கத்தைவிட
சர்வதேசமே பதில் சொல்ல கடமைப்பாடு உள்ளதெனவும் அங்கிருந்தவர்கள் கூறுவதை கேட்கக்கூடியதாக உள்ளது.
கவண ஈர்ப்பஉபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்..
எனது பெயர் தம்பிராசா செல்வராணி நான் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தலைவி.
எனது கணவர் 2009.05.17 திகதி வட்டுவாகல் ஓமந்தை ஊடாக வந்து எனது கண்முன்னால் இரானுவத்திடம் சரணடைதார் அவரோடு சேர்த்து நூற்றுக்கணக்கானவர்களை சுமார் 60-70 பஸ்களில் எற்றி ஓமந்தை ஊடாக அழைத்துச்செல்வதை கண்டேன்.
அழைத்த்செல்லப்பட்ட கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை.
காணாமல் போன கணவருக்காக மாத்திரமின்றி வடகிழக்கில்
வலிந்துகாணாமல் ஆக்கபட்டோர் சார்பில் கவண ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட வந்துள்ளேன்.
கடந்த 11 வருடகாலமாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளோம் எனினும் நான்கு வருட காலமாக உக்கிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளோம்.
எனினும் எமக்கான பதிலை சர்வதேசமே வழங்கமுடியும் என தெரிவித்தார்.
மேலும் இனொருவர் கருத்து தெரிவிக்கையில் எனது பெயர் செல்வராசா சரோஜினி கடத்தப்பட்ட எமது பிள்ளைகள் விடுதலையாக வேண்டும்.
அல்லது அவர்களுக்க என்ன நடந்தது என்று பதில் கூற வேண்டும் அவர்களை வைத்து இருக்கிறார்களா இல்லையா என்பதின் பதிலை சர்வதேசத்திடம் வேண்டி நிற்கிறோம்.
சர்வதேசமோ இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்கிக்கொண்டு இருக்கிறது.
அவர்களும் அதனை உதாசீனம் செய்து கொண்டே உள்ளனர்.
இலங்கை அரசையோ எங்களின் பாராளமன்ற பிரதிநிதிகலையோ நாங்கள் நம்பவில்லை.
சர்வதேசமே உங்களையையே நம்பி உள்ளோம்.
உங்களகன் கவனத்தை ஈர்க்கவே நாங்கள் இன்று திருகோணமலை மாவட்ட மனித உரிமை அலுவலகத்திற்கு முன்னாள் கவண ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
எமக்கான பதிலு சர்வதேசமே எமக்கு வழங்கவேண்டும் என
தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க