இலங்கையின் சமாதானத்துக்காக ஐரோப்பிய ஆணைக்குழு 8.5மில்லியன்; யூரோக்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளை ஒழித்தல், சமூக ஒன்றுமையை ஏற்படுத்தல், சமாதானத்தை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் நலவாழ்வுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த மாத முதல் வாரத்தில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் உதவி தலைவர் பெட்ரிக்கா மொக்ரினுக்கும் இலங்கையின் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இந்த நிதி, கொள்கை வகுப்பாளர்கள், தீவிரவாத ஒழிப்பில் அதிகாரம் மிக்கவர்கள், பாதுகாப்பு மற்றும் நீதித்துறையின் அலுவலங்கள் என்பவற்றுக்கே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க