சினிமா

சிவகார்த்திகேயனின் “நம்ம வீட்டு பிள்ளை” செப்டம்பரில்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘SK16′ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் நேற்று வெளியாகியிருந்தது. சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK16 திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்க   நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ச்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் என பெரிய பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் நடித்துள்ளார். கிராமிய பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘நம்ம வீட்டு பிள்ளை’ என பெயர் வைத்துள்ளதுடன் செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க