முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட பெருந்தோட்ட தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க புதுக்குடியிருப்பு பிரதேச கமநல சேவைகள் திணைக்கள கட்டத்தொகுதியில் அமைந்துள்ள தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகத்தினை திறந்து வைத்துள்ளார்.
முன்னதாக அலுவலகத்தின் பெயர் பலகையினை திரைநீக்கம் செய்துவைத்து தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலத்தினை நாடவை வெட்டி திறந்துவைத்து செயற்பாட்டினை தொடக்கிவைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் வடக்கு தென்னை அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் உள்ளிட்ட பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.
கருத்து தெரிவிக்க