கோத்தபய ராஜபக்ஷவே தேசத்துரோகி என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை தேசத்துரோக செயல் என அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதில் வழங்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் தேசத்துரோக செயலை கோத்தாபய ராஜபக்ஷவே செய்தார் எனவும் ராஜபக்ஷ காலத்தில்மேற்கொள்ளப்பட்ட மோசமான உடன்படிக்கையில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க