சினிமா

தெலுங்கு சினிமாவை தன்பக்கம் திசை திருப்பிய ரெஜினா

மிஸ்டர் சந்திரமெளலி படத்திற்கு பிறகு பார்ட்டி, கசட தபற படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. இந்நிலையில், தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘எவரு’ படம் இம்மாதம் 15ம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே தெலுங்கு சினிமாவில் பேசப்படும் நடிகையாகிவிட்டார் ரெஜினா என்றே கூறலாம். கிரைம் திரில்லர் படமான இப்படத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மற்றும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் வேடத்தில் நடித்துள்ள ரெஜினா, வாழ்க்கையின் வேதனையையும், பதட்டத்தையும் வெளிப்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால் திரைக்கு வருவதற்கு முன்பே டிரெய்லரை வைத்தே ரெஜினாவின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் ரெஜினாவுடன் நவீன் சந்திரா, ஆதிசேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தை வெங்கட்ராம்ஜி இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க