ராகுல் டிராவிட் விவகாரத்தில் கடவுள் தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ-யின் நன்நெறி அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி டி.கே ஜெயின் லாபம் தரும் இரண்டு பதவிகளை வகிப்பது தொடர்பாக டிராவிட்டுக்கு குற்றப்பத்திரம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய டி.கே ஜெயின், `கடந்த வாரம் ராகுல் டிராவிட்டுக்கு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சொல்லப்பட்டிருக்கும் முறைப்பாடு தொடர்பாக அவர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்.
அவரது பதிலை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
இந்நிலையில் டிராவிட்டுக்கு குற்றப்பத்திரம் அனுப்பப்பட்டது தொடர்பாக இந்திய அணியின் கங்குலி கடுமையாக சாடியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கங்குலி, `
`இந்திய கிரிக்கெட்டின் புதிய ஃபேஷன்… இந்த `ஆதாய முரண்’… செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான சிறந்த வழி. இந்திய கிரிக்கெட்டுக்கு கடவுள்தான் உதவ வேண்டும்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
முன்னதாக கங்குலியும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் பதவி மற்றும் ஐபிஎல்-லில் டெல்லி அணிக்கு ஆலோசகர் என இரு ஆதாயம் தரும் பதவியில் இருப்பதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.
கருத்து தெரிவிக்க