விளையாட்டு செய்திகள்

உலகளவில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகள்!

உலகளவில் அதிக சம்பளம் பெறும் டொப்-100 விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் 29.2 மில்லியன் டொலர்களுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

அதிக சம்பளம் பெரும் உலக விளையாட்டு வீராங்கனைகள் முதல் 100 பேர் கொண்ட பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் அண்மையில் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஜப்பான் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா, 24.3 மில்லியன் டொலர்களுடன் இரண்டாம் இடத்திலும் ஜெர்மனி டென்னிஸ் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 11.8 மில்லியன் டொலர்களுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை இப்பட்டியலில் இந்திய பூப்பந்து நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 13வது இடத்தை பிடித்துள்ளார். இவருடைய வருமானம் 5.5 மில்லியன் டொலர்களாகும். இந்திய மதிப்பில் இது சுமார் 38 கோடி ரூபாயாகும்.

இதன் மூலம் இந்தியாவின் அதிக வருமானம் பெரும் விளையாட்டு வீராங்கனையாக சிந்து மாறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க