வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்கா, தென் கொரியாவை எச்சரிக்கும் கிம்!

அண்மையில் தாம் நடத்திய ஏவுகணைச் சோதனையானது, அமெரிக்கா, தென் கொரியாவுக்கான எச்சரிக்கை என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறி உள்ளார்.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாட்டு ராணுவங்கள் இடையேயான கூட்டுப் பயிற்சி நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) தொடங்கியது.

இதைக் கண்டித்துள்ள வடகொரியா, ஒப்பந்தத்தை மீறும் வகையில் அந்த இரு நாடுகளும் செயல்படுவதாக எச்சரித்தது.

இதைத்தொடர்ந்து கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக நேற்று புதிய ரக ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. தெற்கு வாங்கே மாகாணத்தில் இருந்து, இரு ஏவுகணைகளை வடகொரியா ஏவியது.

இரு வாரத்தில் அந்த நாடு நடத்திய நான்கு ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தை மீண்டும் பதற்றம் சூழ்ந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஏவுகணைச் சோதனை குறித்து பேசியுள்ள அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன், கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எச்சரிப்பதற்கான சந்தர்ப்பம் என்று கூறி இருப்பதாக வடகொரிய அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க