உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சமூக சேவையாளர்; அகில இலங்கை சமாதான நீதவனாக நியமனம்!

மன்னார் முருங்கன் அளவக்கை என்னும் இடத்தைச் சேர்ந்த சந்தியோகு பிள்ளை கொண்சன்ரைன் செலஸ்ரன்; அகில இலங்கை சமாதான நீதவனாக மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் இன்று புதன் கிழமை (7) சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
தன்னுடைய ஆரம்ப கல்வியை மன்/அளவக்கை அ.த.க.பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மன்/மாவிலங்கேனிறே.க.த.க.பாடசாலை மற்றும் மன்/நானாட்டான் ம.வி உயர்தரத்தினை மட்/புனிதமிக்கேல் கல்லுரியிலும் தன்னுடைய பாடசாலை கல்வியை நிறைவு செய்தார்.
இலங்கை ராஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிக்கான உயர் டிப்லோமா பட்டத்தினையும் ஐரோப்பிய கண்ட பல்கலைக் கழகத்தில் சமூக நலன்புரி நிர்வாகத்திற்கான முதுமானி பட்டத்தையும் பெற்றுக்கொன்டார்.
IMSESO  நிறுவனதின் ஸ்தாபகரும் இயக்குனருமான இவர் பல்வேறு பட்ட சமூக பணிகளை பாடசாலை மாணவர்களினதும் மற்றும்  இளையோரினதும் நல்வாழ்வுக்காக சிறப்பாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க