இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67) இன்றிரவு (11.10) காலமானார்.
கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் – அதன் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் சுகயீனம் காரணமாக இன்று (06) சிகிச்சைக்காக டில்லியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏழு முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்த சுஷ்மா சுவராஜ், வெளிவிவகார அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்திரா காந்திக்குப் பிறகு 2 ஆவது பெண் வெளிவிவகார அமைச்சராக இருந்தவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க