சினிமா

சர்வதேச அளவில் இடம்பிடித்துள்ள ‘ஒத்த செருப்பு’

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர்  பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஒத்த செருப்பு’. இந்த படம் சிங்கப்பூர் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருப்பதாக பார்த்திபன் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். பார்த்திபன் மட்டுமே நடித்துள்ள இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் விவேக்கின் பாடல் வரிகளுக்கு  சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் ‘குளிருதா புள்ள’ என்ற பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார்.  இப்பாடல் இணையத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்றை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க