வெளிநாட்டு செய்திகள்

கெய்ரோவில், மகிழுந்து மோதியதில் 19 பேர் உயிரிழப்பு

மத்திய கெய்ரோவில், மகிழுந்து மோதி வெடித்து சிதறியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் எகிப்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கெய்ரோவின் நைல் கார்னிச் வீதியில் போக்குவரத்துக்கு இடையே சென்ற மகிழுந்து எதிரே வந்த மூன்று மகிழுந்துளுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது ஒரு தாக்குதலாக இருக்கலாம் என்பதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த விபத்து அருகிலிருந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடி வரை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து எகிப்தின் பொது சட்டத்தரணி விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க