சட்டவிரோத மதுபானம் விஷமானதால் கம்பஹா பாதுராகொட பகுதியில் மரணமானோரின் தொகை 11 ஆக அதிகரித்துள்ளதுடன் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்லேவல, மீரிகம் மற்றும் கொட்டதெனியாய ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
பல்லேவல பொலிஸ் பிரிவில் 5பேரும், கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவில் நால்வரும், மீரிகம பொலிஸ் பிரிவில் இருவரும் இறந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திடீர் மாரடைப்போ இவர்கள் இறப்பிற்கு காரணம் என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்ட போதும் இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 14 பேர் மீரிகம வத்துப்பிட்டிவல , கம்பஹா, ராகம ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் விஷ சாராயம் அருந்தி மரணமடைந்தோரின் உடல்களை வீதியில் வைத்து இவ்வாறு ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டனர்.
பல்லேவல பொலிஸ் பொறுப்பதிகாரி கமல் ரத்நாயக்க இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து உடல்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.
கருத்து தெரிவிக்க