உள்நாட்டு செய்திகள்புதியவை

கடலில் தாழ் அமுக்க நிலை: கடற் தொழிலாளாளர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழ் அமுக்க நிலை ஏற்பட கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் கடல் தொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

தாழ் அமுக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பில் தெரிவித்து பாதுகாப்பு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப் வேதாராச்சி கடல் தொழில் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை குறித்த காலநிலை தொடர்பில் கடல் தொழில் திணைக்களம் வழங்கும் ஆலோசனைக்கு அமைய செயற்படுமாறு அவர் கடல் தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலை நிலை தொடரக்கூடிய வாயிப்பு உள்ளதால் எதிர்வரும் சில தினங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு கடல் தொழிலாளர்கள் மற்றும் கடலுக்கு செல்வோருக்கு திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவு எச்சரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க