முல்லைத்தீவில் பாடசாலை மாணவி திடீரென உயிரிழந்தது தொடர்பில் மேலதிக விசாரணையை நடத்த முல்லைத்தீவு பொலிஸாருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் பணித்துள்ளார்.
உண்ணாப்பிலவு றோமன் கத்தேலிக்க பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த இ.லிந்துசியா (12) என்ற மாணவி கடந்த 29ம் திகதி அன்று உயிரிழந்தார்.
பாடசாலையில் இருந்தபோது இழுப்பு (சுவாசநோய்) ஏற்பட்டதாகவும், உடனடிய சிகிச்சை மேற்கொள்ளாததாலேயே அவர் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
மாணவி பகல் 12.30 மணிக்கு இழுப்பு நோயால் சுவாசிக்க அவதிப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் பிற்பகல் 2 மணிக்கே முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமியினை அனுமதித்துள்ளார்கள்.
மரண விசாரணை அதிகாரிகளின் விசாரணைகளின் பின்னர் சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்கு பணிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனமே மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் என பெற்றோர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு பொலிஸாருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பணித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க