மலையக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, சிறந்த தொழில்வாய்ப்புகளில் ஈடுபடுவதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
ஹப்புத்தலை தொட்டலாகல தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று (01) நண்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார
பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் தமிழ் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டார்.
நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்து வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனைப் பார்வையிட்டார்.
ஜனாதிபதி அவர்களின் வருகையை முன்னிட்டு பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், நிமல் சிறிபால டி சில்வா, செந்தில் தொண்டமான், அனுர வித்தானகமகே உள்ளிட்ட மாகாண அரசியல் பிரதிநிதிகள், பாடசாலையின் அதிபர் முத்தையா சுந்தர்ராஜ் உள்ளிட்ட ஆசிரியர் குழாமினர், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து தெரிவிக்க