தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கின்ற பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் இன்று (31) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, இலங்கையில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு, நீடிக்கும் அரசிதழ் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்தார்.
இந்த அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு அனுமதி அளிக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, அவசரகாலச்சட்டத்தை நீடிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
வாக்கெடுப்பின்போது ஆதரவாக 42 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
கருத்து தெரிவிக்க