முடியுமானால் ஆட்சியைக் கவிழ்த்துக்காட்டுமாறு அத்துரலிய ரத்தன தேரருக்கு சவால் விடுத்துள்ளார் மேல்மாகாணசபையின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” சிங்கள மக்களை தூண்டும் வகையில் அத்துரலிய ரத்தன தேரரால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் நாட்டின் நலனைக்கருதியே நாம் பதவி துறந்தோம்.
இன்று முஸ்லிம் அரசியல் வாதிகள் குற்றவாளிகள் அல்லர் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, ரத்தன தேரர் இன்று தோல்வியடைந்துள்ளார்.
என்ன செய்வதென்று புரியாமல் 7 நாட்களுக்குள் ஆட்சியை கவிழ்க்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துவருகின்றார். முடியுமானால் அதை செய்துகாட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.” என்றும் அஸாத் சாலி கூறினார்.
கருத்து தெரிவிக்க