நாட்டுக்காக ஒன்றிணைவோம் கம்பஹா மாவட்டத்திற்கான வேலைத்திட்டத்தின் முதல் நாளில் 812 அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனூடாக 2 இலட்சத்து 18 ஆயிரத்து 513 பேர் நன்மையடைந்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தின் 13 பிரதேச செயலக பிரிவுகளை மையப்படுத்தி நேற்று நாட்டுக்காக ஒன்றிணைவோம் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பமானது.
இரண்டாம் நாளான இன்று மேலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருக்கும் எமது விசேட பிரதிநிதி இந்திக துஷார தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பிரதேச மக்களை மையப்படுத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரதேச செயலக காவரியாசலயத்தில் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
திவுலப்பிட்டிய மக்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்காத பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள், அமைச்சுக்களின் அதிகாரிகள் தீர்வுகளை வழங்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சிறுநீரக நோய்த்தடுப்பு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேபோல் கம்பஹா மாவட்டத்தில் 13 பிரதேச செயலகங்களை இலக்குவைத்து இன்று மாலை வரை பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது விசேட பிரதிநிதி இந்திக துஷார தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேரடி கண்காணிப்பின் கீழ் இதன் சகல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க