இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் இரண்டாவது வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை டிசம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த, நீதிபதிகள் குழுவின் அமர்வு தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தெரிவித்து ரஞ்சன் ராமநாயக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க