ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (31) சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.
ஐ.தே.க. தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளன.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க