அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், சரியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று கூறினார்.
எனவே மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ள அவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என கூட்டு எதிரணி வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்து தெரிவிக்க