உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாளை 341 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனம்!

கிழக்கு மாகாணத்தில் நாளை 341 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.

சகல விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்களும் அந்தந்த வலயக் கல்விப் பணிமனைக்குச் சென்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு உடனடியாக தங்களுக்கான பாடசாலைக்குச் சென்று கடமையை பொறுப்பேற்குமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.

இவர்களது பெயர் நியமிக்கப்பட்ட பாடசாலை மற்றும் வலயம் தொடர்பான பூரண விபரம் கிழக்குமாகாணக் கல்வித்திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தின் முகவரி www.eastpde.edu.lk இணையத்தளத்தில் பெயர் இடம்பெறாத விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் தேசிய பாடசாலைக்கு நியமிக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் உயர் கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைக் கிளையுடன் தொடர்பு கொண்டு நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பு இசுறுபாய கல்வி அமைச்சிலிருந்து நியமனக் கடிதங்களை திங்களன்று வழங்குமாறு மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க