‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் நாளை திகதி முதல் அடுத்த மாதம் 5ம் திகதி வரையில் கம்பஹா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மாவட்டத்தில் பொதுமக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் சேமநலன் பணிகளை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள், மேல் மாகாண சபை இந்த தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பங்குபற்ற உள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 5ம் திகதி இந்த தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மதிப்பீடு மற்றும் நிறைவு வைபவம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் தலைமையில் இடம் பெறவுள்ளது.
கருத்து தெரிவிக்க