இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல் வழிப்பாதுகாப்பு தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்த்தன மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் Kenji Harada வும் இது தொடர்பான புரிந்துணர்வு உடனபடிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜப்பான் தூதுக்குழுவினரும் இலங்கையின் சார்பில் இராஜாங்க அமைச்சரின் தலைமையிலான குழுவினரும் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க