உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 80 வருட பூர்த்தி கொண்டாட்டம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு 25.07.2019 அன்றுடன் 80 வருடங்களாகின்றது.

1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது .

பின் இலங்கை இந்திய காங்கிரஸ், இலங்கை  தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் பெற்றது. அதன் தலைவராக அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் செயற்பட்டு வந்தார்.

அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் மேலோங்கி வருவதற்கு பாடுப்பட்ட தலைவர்கள் மற்றும்  அனைவரையும் ஞாபகம் கூர்ந்து  அவர்களுக்கான மரியாதைகளும் செலுத்தப்பட்டன.

இதனை முன்னிட்டு மலையகத்தில் உள்ள பல ஆலயங்களில் விசேட பூஜை வழிப்பாடுகள் இடம்பெற்றதுடன் இ.தொ.காவின் காரியாலயங்களில் விசேட  நிகழ்வுகளும் இடம்பெற்றது.

அந்தவகையில், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் கொட்டகலை டிரேட்டன் சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

பத்தனையில் அமைந்துள்ள இ.தொ.காவின் கட்சி காரியாலயத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண விவசாயத்துறை முன்னாள் அமைச்சர் ரமேஷ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

கருத்து தெரிவிக்க