உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் இன்று யாழில் திறந்து வைப்பு!

யாழ்.போதனா மருத்துவமனையில் குவைத் நாட்டின் செம்பிறைச் சங்கத்தின் 530 மில்லியன் ரூபா நன்கொடை நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்  இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர் மருத்துவக் கலாநிதி ஹிலால் முசேட் அல் சேயர் இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவர் கலாவ் (ப்)பூ தாஃயர்,  சிங்கப்பூர் சுகாதார சேவை தலைமை நிறைவேற்று அதிகாரி ,யாழ்.போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி த.சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து மீள்வாழ்வு சிகிச்சை நிலைத்தைத் திறந்து வைத்துள்ளனர்.
இதில் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்  வடக்கு ஆளுநரின் செயலர் உட்பட  மருத்துவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூர் நாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கு  இணையானதாக நாட்டில் வேறு எங்கும் இல்லாத நவீன உபகரணங்களுடன் இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலைய அமைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க