சினிமா

மண்டேலாவில் கதாநாயகனாக நடிக்கும் யோகி பாபு!

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் பாலாஜி மோகன்  ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் “மண்டேலா”  எனும் புதிய படத்தைத் தயாரிக்க இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இந்த படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார் எனவும் இயக்குனர் பாலாஜி மோகன் தனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தர்மபிரபு படத்துக்குப் பிறகு இனி கதாநாயகனாக நடிப்பதில்லை என முடிவெடுத்த யோகிபாபு மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் மண்டேலா என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க