உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

50 ரூபாய் விவகாரம்; அமைச்சர் நவீனுக்கு எதிராக அட்டனில் ஆர்ப்பாட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்துடன் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை  இணைக்குமாறு வலியுறுத்தி அட்டனில் 24.07.2019 அன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அட்டன் நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக பிற்பகல் 3 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள்,பொது மக்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்துக்கு அமைவாக, 50 ரூபாய் நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுதுடன்,அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்தது.

ஆனால் இந்த விடயத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தடையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் அட்டன் கொழும்பு மற்றும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

[ நிருபர் க.கிஷாந்தன் ]

கருத்து தெரிவிக்க