முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் ஆகிய இரண்டு மாதிரி கிராமங்களில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று(24) மக்களிடம் கையளிக்கப்பட்டது
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ், உதயம் நகர் மாதிரி கிராமத்திற்குள் 25 வீடுகளும் ஆதவன் நகர் மாதிரி கிராமத்தில் 25 வீடுகளுமாக மொத்தமாக ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையிலே நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்க படுகின்ற மாதிரி கிராமங்கள் வரிசையிலே 223 ஆவது மற்றும் 224 மாதிரி கிராமங்களான உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் கிராமங்களின் வீடுகளை மக்களிடம் இன்று சஜித் பிரேமதாஸ மக்களிடம் கையளித்தார்
இன்று காலை 10.30 மணிக்கு இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்றதோடு பல்வேறு வாழ்வாதார திட்டங்கள் வீடமைப்பு கடன்கள் மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் சஜித் பிரேமதாச மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து தெரிவிக்க