தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் கிராம அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 15வயதைப் பூர்த்தி செய்து முதற்தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு ஒருவர் 100ரூபா செலுத்தல் வேண்டும்.
தேசிய அடையாள அட்டையைத்திருத்தி இணைப்பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 250ரூபாவும் தொலைந்த தேசிய அடையாள அட்டைக்குப்பதிலாக இணைப்பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 500ரூபாவும் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த காலத்தில் இத் தண்டப்பணத்தில் வசதியற்றவர்களுக்கு கிராம அலுவலகர் ஊடாக பிரதேச செயலாளருக்கு சிபாரிசு வழங்கும் பட்சத்தில் இத்தண்டப்பணம் விலைக்கழிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அத்திட்டம் நிறுத்தப்பட்டு இத்தண்டப்பணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பலர் இந்நடவடிக்கையினால் அவல நிலைக்குச் சென்றுள்ளனர்.
இதனால் தேசிய அடையாள அட்டையைத் தொலைத்த ஒருவர் 500ரூபா தண்டம், முத்திரைச் செலவுகள் புகைப்படம் உட்பட 1100ரூபாவிற்கு மேல் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
[ நிருபர் ரூபன் ]
கருத்து தெரிவிக்க