உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னாரில் சட்ட விரோதமாக கற்றாழைத் தாவரங்கள் அகழ்வு!

மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தின் வனப்பிரதேசமான ‘கற்றாலம் பிட்டி’ என அழைக்கப்படும் பிரதேசத்தினுள் இயற்கை வளமான கற்றாழைத் தாவரங்கள் பரந்து காணப்படுகின்றன.
குறித்த கற்றாழை தாவரம் தொடர்ச்சியாக வியாபார நோக்குடன் சட்ட விரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்டு வருவதாக வங்காலை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக அப்பகுதியில் கற்றாழை அகழ்வு இடம் பெற்று வந்த நிலையில் வங்காலை மக்களின் எதிர்ப்பினால் அகழ்வு பணிகள் கைவிடப்பட்டது.
தற்போது கூட மன்னார் மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வியாபார நோக்கத்திற்காக கற்றாழைச் செடிகள் களவாடப்பட்டு வருகின்றன.
மன்னார் எருக்கலம்பிட்டி சாந்திபுரம் தாராபுரம் போன்ற கிராமங்களில் இருந்து குறித்த செடிகள் மற்றும் வளங்கள் வியாபார நோக்கத்திற்காக பிடுங்கப்பட்டு வெளி பிரதேசங்களுக்கும் வெளி நாடுகளிற்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நானாட்டான் பிரதேச சபையினால் அண்மையில் வங்காலை ‘கற்றாலம் பிட்டி’ பகுதியில் கற்றாழை அகழ்விற்கு   எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டு தடை விதிக்கப்பட்டது.
குறித்த அகழ்வு பணியை தடை செய்தல் தொடர்பாக அறிவித்தல்  பலகையும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
எனினும் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் சட்ட விரோதமான முறையில் இடம் பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துளள்னர்.
உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அறிவித்தல்களை மீறி தொடர்ச்சியாக வியாபார நோக்கில்   கற்றாழை அகழ்வில் ஈடுபட்டு வருகின்றதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த வாரம் குறித்த பகுதியில் கற்றாழை அகழ்வில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மக்களால் பிடிக்கப்பட்டு வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
வங்காலை பொலிஸார் குறித்த நபர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது குறித்த நபர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டமையினால் குறித்த நபர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
[நிருபர் லம்பார்ட் ரோசரின்]

கருத்து தெரிவிக்க